Categories: இந்தியா

Scam Alert : ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துபவரா நீங்கள்…? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்…!

Published by
லீனா

ஆன்லைன் பேமண்ட் முறைகளில் மோசடிகளை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

நம்மில் அதிகமானோர் பணம் செலுத்துவதற்கு எடுப்பதற்கும் ஆன்லைன் பேமெண்ட் முறைகளை தான் பயன்படுத்துகிறோம். ஆன்லைன் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதான ஒன்றாக உள்ளது. இதனால் அதிகமானோர் ஆன்லைன் பேமண்ட் முறையை தான் பயன்படுத்துகின்றனர்.  இதன் காரணமாக மோசடி செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆன்லைன் பேமண்ட் முறைகளில் மோசடிகளை தவிர்க்க கீழ்க்காணும் சில முறைகளை பின்பற்றுங்கள்:

UPI பின்னை பகிர வேண்டாம் :

UPI பின்னை மற்றவர்களுக்கு பகிர்வதை தவிர்த்து விடுங்கள். அரசு நிறுவனம் வங்கி அல்லது ஏதேனும் அறியப்பட்ட நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி உங்களது யுபிஐ பின்னை கேட்டால் ஒருபோதும் பகிராதீர்கள். வங்கிகளிலோ அல்லது அரசு நிறுவனங்களிலோ ஒருபோதும் உங்களது பின்னை கேட்க மாட்டார்கள். அதேபோல எஸ்எம்எஸ் மூலமாகவு யாராவது உங்களது UPI  பின் விவரத்தை கேட்டால் அவர்களுக்கு பகிராதீர்கள். அவ்வாறு கேட்பவர்கள் மோசடி செய்பவர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முன்கூட்டியே பணம் செலுத்துதல் 

அண்ணலின் மூலம் நாம் சில பொருட்களை வாங்கும் போது முன்கூட்டியே பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலமாக செலுத்துவதுண்டு. இதன் மூலமாகவும் பல மோசடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. எனவே உங்களுக்கு எதிரில் இருப்பவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை யானவர்கள் என்று அறிந்தால் மட்டுமே பரிவர்த்தனையை தொடர வேண்டும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் பணம் பரிவர்த்தனை செய்வதை நிறுத்தி விடுங்கள்.

அதிகாரபூர்வ தளங்களில் இருந்து செயலி பதிவிறக்கம்

நீங்கள் நிதி பயன்பாட்டிற்காக அல்லது மற்ற விஷயங்களுக்காகவும் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யுங்கள். அதாவது கூGoogle Play Store, Windows App Store அல்லது Apple App Store போன்ற அதிகாரபூர்வ தளங்களில் இருந்து மட்டும் பதிவிறக்கம் செய்யுங்கள்.

யுபிஐ பின்னை மாற்றி கொண்டே இருங்கள்

ஒவ்வொரு மாதமும் உங்களது யுபிஐ பின்னை மாற்றுவது முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு மாற்றுவதன் மூலம் நீங்கள் மோசடி செய்பவர்களின் வலைகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க ஒரு நல்வாய்ப்பாக இருக்கும். எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல்களில் சந்தேகத்துக்கிடமான ஏதேனும் link அனுப்பப்பட்டால் அதனை கிளிக் செய்யாதீர்கள்.

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

4 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

6 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

7 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

8 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

9 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

9 hours ago