சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ விசாரணைக்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் சிபிஐ விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின் சிபிஐ தரப்பில் இரண்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது , உச்சநீதிமன்றம் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் , மேற்கு வங்க டிஜிபி மற்றும் மேற்கு வங்க தலைமைச்செயலாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராகும் போது விசாரிக்கலாம், ஆனால் கைது செய்யக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
7 நாட்களில் கைது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.ஆனால் அதற்குள் உரிய நீதீமன்றத்தை அணுகி ராஜீவ்குமார் முன்ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…
சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…
ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…
கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…