குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது .கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது.இதனால் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் எனவே இந்த சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ்,திமுக ,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, அனைத்து அசாம் மாணவர் சங்கம், ரிகாய் பஞ்ச், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே ,நீதிபதி காவை,சூர்யா காந்த் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு நடத்தியது.அப்பொழுது குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். சட்டதிருத்தத்திற்கு எதிரான மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.
இதனையடுத்து இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றது.அப்பொழுது தலைமை நீதிபதி, அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமான உத்தரவை பிறப்பிக்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வழக்குகள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.வழக்கினை 5 வாரங்களுக்கு ஒத்திவைத்தும், மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 வாரகால அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…