#BREAKING : 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
மருத்துவப் படிப்பில் ஒ.பி.சி மாணவர்களுக்கு, நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் கூறியது.
இதன் பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அப்பொழுது இந்திய மருத்துவ கவுன்சிளின் வாதத்தை ஏற்க முடியாது எனவும், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாமென தெரிவித்தது. மேலும் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை என தெரிவித்தது. இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் எனவும், இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக தடை இல்லை என தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதனால் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 % இட ஒதுக்கீடு அல்லது 27% இட ஒதுக்கீடு என எதையும் இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் தகவல் தெரிவித்தது.இந்நிலையில் மருத்துவப் படிப்பில் ஒ.பி.சி மாணவர்களுக்கு, நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.