ஐஎன்எக்ஸ் வழக்கு: சிதம்பரத்திற்கு முன்ஜாமின் வழங்க முடியாது – உச்ச நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க தடைகோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு இடையில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.பின் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்துக்கு சிபிஐ காவலில் வைக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க தடைகோரிய வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.அதில்,ஐ.என்.எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து ,முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அமலாக்கத்துறை வழக்கில் கீழமை நீதிமன்றங்களை அணுகலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025