டெல்லி: ஜூன் 1 வரையில் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்க கோரிய கெஜ்ரிவால் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது.
இந்த, வழக்கு விசாரணையின்போது, கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாள் ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கோடை விடுமுறையை குறிப்பிட்டு இந்த இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு குறிப்பிட்டு இருந்தது. மேலும் ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் சரணடைய வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டது.
இதனை அடுத்து கடந்த வாரம், உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை கெஜ்ரிவால் தரப்பு தாக்கல் செய்தது. அதில், தனது மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு இடைக்கால ஜமீனை மேலும் 7நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்றும் ஜூன் 9ஆம் தேதி சிறை அதிகாரிகளிடம் சரணடைவதாகவும் குறிப்பிட்டார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை விசாரித்த, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு கோரிக்கையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும், கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கோடை விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்புமாறும் கூறி கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு.
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை),…
துளசி இலையின் பல்வேறு ஆயுர்வேத நன்மைகள் பற்றி மருத்துவர் மைதிலி தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டதை இந்த செய்தி…