நாளை மாலை 5 மணிக்குள்… நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

டெல்லி: நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. இந்த புதிய வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணை நடைபெற்று வருகிறது
இன்று நடைபெற்ற விசாரணையில்,நீட் மறுதேர்வு குறித்த மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் , நீட் தேர்வில் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே நீட் நுழைவு தேர்வு பற்றி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று நீதிபதி அமர்வு உத்தரவிட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில், முக்கிய உத்தரவை உச்சநீதிமன்ற தலைமை அமர்வு பிறப்பித்தது. அதில், நடப்பாண்டில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் இன்னும் முழுதாக வெளியிடப்படவில்லை என்றும், அவை முழுதாக வெளியானால் மட்டுமே நீட் தேர்வு குறித்து முடிவு எடுக்க முடியும் என கூறினர்.
மேலும், நாளை மாலை 5 மணிக்குள் மாநிலம், நகரம் , தேர்வு வாரியம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் என்றும், அதில், மாணவர்களின் தனிப்பட்ட அடையாளம் வெளியாக கூடாது என்றும் கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், இதனை மத்திய அரசு ஏற்க மறுத்தது. தேர்வு வாரியம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சிரமம் என தெரிவித்தது. ஆனால் அதனை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. நாளை மாலை 5 மணிக்குள் நீட் தேர்வு முடிவுகள் விரிவாக வெளியிட வேண்டும் என்று கூறி, வரும் திங்கள் (ஜூலை 22) அன்று வழக்கு விசாரணை நடைபெறும் என கூறி வழக்கை ஒத்திவைத்தனர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025