மதம் மாறினால் ஜாதி சான்றிதழ் செல்லாது.! – தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அறிவிப்பு.!
மதம் மாறிய பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு SC ஜாதி சான்று செல்லாது. அத்தனையும் மீறி வழங்கினால் அது போலி சான்றிதழ். – தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தார்.
தமிழகத்தில் ஜாதிகளை வகுப்பு வாரியாக பிரித்து பிறப்படுத்தபட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பினர் (MBC), தாழ்த்தப்பட்டோர் (SC/ST), இதர வகுப்பினர் (OC) என வகைப்படுத்தி அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அரசு வழங்கி வருகிறது.
குறிப்பாக தாழ்த்தப்பட்டோர் (SC/ST) எனும் பிரிவுக்கு அரசு அவர்கள் வாழ்வு மேம்பட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த இடஒதுக்கீடு குறித்து இன்று தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தார் ஓர் முக்கிய தகவலை குறிப்பிட்டார்.
அதாவது பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் மதம் மாறினால், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள SC சான்று செல்லாது. அல்லது மதம் மாறிய பின்னர் SC சாதி சான்று வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ் என தெரிவித்தார் தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தார்.