தேர்தல் பத்திரம் தொடர்பான ஆவணங்களை நீக்கியது SBI!
Electoral Bonds : அரசியல் கட்சிகள் நிதி பெற வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்கள் முறை ரத்து செய்து கடந்த மாதம் 15ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பத்திர திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை, இதனால் அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
Read More – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுன்க் மாமியாருக்கு இந்தியாவில் எம்பி பதவி.! மகளிர் தின சர்ப்ரைஸ்..!
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய பாஜ அரசால் கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என கூறி ரத்து செய்தது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நிதியை, நிதி அளித்தவர்களிடமே திருப்பி செலுத்த வேண்டும் அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் எஸ்பிஐ தேர்தல் ஆணையத்தில் வழங்க வேண்டும் என்றும் மார்ச் 13ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது.
Read More – மகளிர் தினத்தன்று பிரதமர் கொடுத்த அறிவிப்பு… சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைவு!
இதனிடையே, தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை வெளியிட ஜூன் 30ம் தேதி அதாவது நான்கு மாதம் வரை கூடுதல் கால அவகாசம் கோரி SBI உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து, தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை வெளியிட அவகாசம் கோரிய எஸ்பிஐ வங்கிக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தது.
Read More – திமுகவிடம் நாங்க 4 கேட்டோம்.. 2 சீட் கொடுத்துருக்காங்க.! திருமாவளவன் பேட்டி.!
இந்த நிலையில், எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இருந்து தேர்தல் பத்திரம் தொடர்பான அறிவிப்பு மற்றும் ஆவணங்களை நீக்கியுள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு (குறிப்பாக பாஜகவுக்கு) நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிடுவதை தவிர்க்கவே, எஸ்பிஐ வங்கி ஆவணங்களை நீக்கியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.