கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது எஸ்.பி.ஐ…!
எஸ்.பி.ஐ. வங்கி, வீடு மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்தியுள்ளதால், இ.எம்.ஐ. எனப்படும் மாதந்திர தவணைத் தொகையும் அதிகரித்துள்ளது.
கடன்களுக்கான வட்டிவிகிதத்தை எச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி ஆகியவை உயர்த்தின. இதைத் தொடர்ந்து, கடன்களுக்கான வட்டி விகிதத்தை, எஸ்.பி.ஐ. வங்கியும் உயர்த்தியுள்ளது.
கடந்த மே 28ஆம் தேதி நிரந்தர டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்.பி.ஐ. வங்கி, தற்போது குறுகிய மற்றும் நீண்டகால கடன்களுக்கு பூஜ்யம் புள்ளி ஒரு சதவீதத்துக்கு வட்டி விகிதத்தை உயர்த்துள்ளது.
இந்த மாற்றம் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது. இதனால், கடன்களுக்கான மாதாந்திர இ.எம்.ஐ. தொகையும் அதிகரித்துள்ளது.