தேர்தல் பத்திரங்கள் : உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி… சீரியல் நம்பர்களுடன் தாக்கல் செய்த SBI.!
Electoral Bonds : கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கும் நடைமுறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது. மேலும், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்கிய விவரங்கள், பல்வேறு நிறுவனங்கள், தனி நபர்கள் ஸ்டேட் பாங்க் மூலம் தேர்தல் பத்திரங்களை வாங்கிய விவரங்கள் ஆகியவற்றை வெளியிட உத்தரவிட்டது.
Read More – இந்தியாவில் ஜனநாயகம் இல்லை… ரயில் டிக்கெட் கூட எடுக்க முடியவில்லை… ராகுல் காட்டம்.!
இந்த உத்தரவின்படி, முதலில் தேர்தல் பத்திர விவரங்களை சீரியல் நம்பர்கள் எதுவும் இன்றி வெளியிட்டது. அதில் சுமார் 6000 கோடி ரூபாய் அளவுக்கு ஆளும் பாஜக அரசு தேர்தல் பத்திரங்களை வாங்கிய விவரமும், பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் அதிக அளவு தேர்தல் பத்திரங்களை வாங்கிய விவரமும் வெளியாகி இருந்தது. இருந்தும், சீரியல் நம்பர்கள் இல்லை என்பதால் யார் யார் எந்த கட்சிக்கு கொடுத்தார்கள் என்ற விவரம் தெரியாமல் இருந்து வருகிறது.
Read More – இந்திய பகுதிகளை உரிமை கொண்டாடும் சீனா.! எதிர்ப்பு காட்டும் அமெரிக்கா
இதனை குறிப்பிட்டு, சீரியல் நம்பர்களுடன் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மீண்டும் SBIக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, தற்போது சீரியல் நம்பர்களுடன் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் SBI சமர்ப்பித்துள்ளது.
Read More – 3 வருடத்தில் 1,229 கோடி ரூபாய் கல்லா கட்டிய ரயில்வேத் துறை.! எப்படி தெரியுமா.?
இது தொடர்பாக SBI, உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், SBI இப்போது அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் முழுமையான சீரியல் எண்கள் [KYC விவரங்களைத் தவிர] தெளிவாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. சீரியல் நம்பர்கள் உடன் தேர்தல் பத்திர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.