#SAVESABARIMALA…! உருவானது புதிய ஹேஷ்டேக்…பெண்களே நடத்திய சேவ் சபரிமலை பிரம்மாண்ட போராட்டம்….!
பெண்களே சபரிமலை காப்போம் என்ற போராட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர்.மேலும் புதிய ஹேஷ்டேக் உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி அனைத்து பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உத்தரவிட்டது.ஆனால் இந்த தீர்ப்பு வரவேற்பையும்,எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சிலைகள் மற்றும் உடைவாள் கேரளாவுக்கு எடுத்து சென்ற போது சபரிமலை காப்போம் என பக்தர்கள் பதாகைகளை ஏந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலை ஐயப்பன் சுவாமிக்கு ஆண்டுதோறும் நவராத்திரி பூஜைக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கேரள மாநிலத்துக்கு சாமி சிலைகள் மற்றும் உடைவாள் எடுத்து செல்லும் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
இதைமுன்னிட்டு இன்று தமிழக கேரளா எல்லையான களியக்காவிளையில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது நூற்று கணக்கான பக்தர்கள் சபரிமலையில் பெண்களை அனுமதித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை காப்போம் என பதாகைகள் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.இந்த போராட்டத்தில் அதிக பெண்களே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டத்தால் போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.மேலும் #SAVESABARIMALA என்ற ஹேஷ்டேக் உருவாகியுள்ளது.அதில் இந்த தீர்ப்பு குறித்த எதிர்ப்பையும் கருத்துக்களையும் பதிவிட்டு தெரிவித்து வருகின்றனர்.சமூக வலைதளங்களில் இந்த ஹேஷ்டேக் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.பெண்களுக்கு சாதகமான தீர்ப்பு ஒரு புறம்..,தீர்ப்பை எதிர்த்து குரல் கொடுக்கும் பெண்கள் ஒரு புறம் என்று சபரிமலை ஒயாத சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது.
DINASUVADU