மருத்துவர்களை பாஜக அரசிடமிருந்து காப்பாற்றுங்கள்-ராகுல் காந்தி..!
மருத்துவர்களை மத்திய பாஜக அரசின் அயோக்கியதனத்திடமிருந்து காப்பாற்றுங்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய நாளிலிருந்து மத்திய பாஜக அரசு தொற்றை கையாளும் விதம் சரியில்லை என்று தனது கருத்துக்களை ராகுல் காந்தி எடுத்து வைத்து வருகிறார். அந்தவகையில், மத்திய பாஜக அரசின் செயல்களை விமர்சித்து சமூக ஊடகமான ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி அடிக்கடி தனது கருத்தை பதிவு செய்வார்.
தற்போது ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளதாவது:
மருத்துவர்களை கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதுபோல் மருத்துவர்களை மத்திய பாஜக அரசின் அயோக்கியதனத்திடமிருந்தும் காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Doctors need protection from Coronavirus as well as BJP governments’ callousness.
Save the saviours!
— Rahul Gandhi (@RahulGandhi) June 4, 2021