சாவர்க்கரின் தியாகம், தைரியம், உறுதியும் நம்மை ஊக்குவிக்கின்றன – பிரதமர் மோடி புகழாரம்
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான “மன் கி பாத்” 101வது பகுதி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அதில், இந்த அத்தியாயம் மன் கி பாத்தின் இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்று தனது உரையை தொடங்கியுள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியின் வெற்றிக்கு மக்களின் பங்களிப்பே காரணம் என்றார்.
பின்னர், வீர் சாவர்க்கரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘அவரது தியாகம், தைரியம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை நம் அனைவரையும் ஊக்கப்படுத்துகின்றன. வீர் சாவர்க்கரின் ஆளுமை வலிமை மற்றும் பெருந்தன்மை கொண்டது என்று புகழாரம் சூட்டினார்.
Sharing this month’s #MannKiBaat. Do tune in! https://t.co/oAI7fthh6q
— Narendra Modi (@narendramodi) May 28, 2023
வீர் சாவர்க்கரின் ஆளுமை உறுதியும் பெருந்தன்மையும் கொண்டது. அவரது அச்சமற்ற, சுயமரியாதை குணம் அடிமை மனநிலையை சிறிதும் பிடிக்கவில்லை. வீர் சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்திற்காக மட்டுமல்ல, சமூக சமத்துவத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் என்ன செய்தார் என்பது இன்றும் நினைவுகூரப்படுகிறது என்று தனது டிவிட்டர் ட்வீட் செய்துள்ளார்.
Tributes to the great Veer Savarkar on his Jayanti. #MannKiBaat pic.twitter.com/gsLg0OA3cv
— PMO India (@PMOIndia) May 28, 2023