சாவர்க்கரின் மன்னிப்பு கடித விவகாரம்.! ராகுல் காந்தி மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.!

Default Image

சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் கொடுத்ததாக ராகுல் காந்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிராவில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

நேற்று காங்கிரஸ் கூட்டத்தில் அவர் பேசுகையில், அந்தமான் சிறையில் சாவர்க்கர் இருந்தபோது ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் என ஓர் கடிதத்தை காண்பித்தார்.

சாவர்க்கர் குறித்து ராகுல்காந்தி பேசிய கருத்துக்கு சிவசேனா மற்றும் பாஜக தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளரான வந்தனா சுஹாஸ் டோங்ரே, மகாராஷ்டிரா சிவாஜி நகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தி பேசிய கருத்துகள் அவரை அவதூறு செய்தது போல உள்ளது. இது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. அதனால் ராகுல்காந்தி மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை அடுத்து, ராகுல்காந்தி மீது இந்திய தண்டனை சட்டம் 500 மற்றும் 501 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்