2000 ஊழியர்களை திருப்பி அனுப்பிய சவூதி அரேபியா நிறுவனம்!

கொரோனா வைரஸ் பிரச்சனை முடிவடையாத நிலையில் தன்னுடைய ஊழியர்களில் 2000 ஊழியர்களை சவுதி அரேபியா திருப்பி அனுப்ப உள்ளது.
சவுதி அரேபிய வளைகுடா பகுதியில் உள்ள ஒரு பெரிய நிறுவனம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை திருப்பி அனுப்பவுள்ளது. இது ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஒன்பது விமானங்களில் அவரது ஊழியர்களை ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. அச்சம் மற்றும் அவசர நிலையை கருத்தில் கொண்டு கூலி வேலை செய்பவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை தேர்வு செய்து வீட்டுக்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 1,665 பேர் இந்தியர்கள் தானாம்.