தென் இந்தியாவை குறிவைத்துள்ள சவுதி அரேபியா! 7 லட்சம் கோடி முதலீடு!
இந்தியாவில் நம் நாட்டிற்கு தேவையான கச்சா எண்ணெயை முதலில் ஈரான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது. அண்மையில் ஈரான் நாட்டிலிருந்து வாங்குவதை இந்தியா நிறுத்தி கொண்டது. இதனால், கச்சா எண்ணெய்காக சவுதி அரேபியா நாட்டினை இந்தியா அதிகம் நம்பியுள்ளது.
சவுதி அரேபியா நாட்டிற்கும், ஈரானுக்கும் பிரச்சனை என்பதால், கச்சா என்னைகொள்முதல்செய்யாத இந்தியா மீது சவுதி அரேபிய மிகவும் நட்பு பாராட்டி வருகிறது. மேலும், 100 பில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் கோடி இந்தியாவில் தொழில் தொடங்க சவுதி அரேபிய அரசு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த 100 பில்லியன் டாலரை சவுதி அரேபியா, இந்தியாவில் எரிசக்தி துறை, ஆட்டோமொபைல், சுரங்கம், விவசாயம் என 40 துறைகளின் முதலீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிலும் முக்கியமாக இந்த முதலீடுகளை தென் இந்தியாவில் களமிறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.