குடியுரிமை திருத்தச்சட்டம் ..!மிகவும் வருத்தமாக உள்ளது -மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ கருத்து

Default Image
  • குடியுரிமை திருத்த சட்டம்  அண்மையில்  கொண்டுவரப்பட்டது.
  • இது குறித்து மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கருத்து தெரிவித்துள்ளார். 

ஐதராபாத்தில் பிறந்த சத்ய நாதெள்ளா, மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். சத்ய நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆவார். ஸ்டீவ் பால்மரை தொடர்ந்து கடந்த  2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் முதன்மை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து,பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கு இடையில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா பங்கேற்றார்.இதன் பின்னர் செய்தியாளகர்ளை சந்தித்தார் சத்யா நாதெள்ளா.அப்பொழுது அவரிடம், BuzzFeedNews என்ற பத்திரிக்கையின் எடிட்டர் பென் ஸ்மித் குடியுரிமை சட்டம் குறித்து கேள்வி கேட்டார்.அதற்கு   அவர் பதில் அளிக்கையில், இந்தியாவில் நடப்பதை பார்க்க மிகவும் வருதமாகவுள்ளது. இது சரியானது  அல்ல. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த ஒருவர் இந்தியாவில் அடுத்த யூனிகார்ன்  தயாரிப்பதையோ அல்லது இன்போஸிஸ் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ ஆவதையோ நான் காண விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை பென் ஸ்மித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவாக பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்