அழைப்பை வாபஸ் பெறுகிறேன்!ராகுல் காந்தி கருத்தால் பின்வாங்கிய காஷ்மீர் ஆளுநர்

Published by
Venu

ராகுல் காந்தியை காஷ்மீருக்கு அழைத்த கருத்தை வாபஸ் பெற்றுள்ளார் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசி அறிவித்தது.இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே  ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பி வருகிறது.குறிப்பாக எதிர்க்கட்சிகள் கடுமையாக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறது.

அந்த வகையில்  காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து  நடைபெற்று வருவதாக கடந்த சிலநாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்தார்.

ராகுலின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறுகையில், ராகுல் காந்தி காஷ்மீருக்கு வரவேண்டும் என்று நான் அழைப்புவிடுக்கிறேன்.ராகுல்  காஷ்மீருக்கு வருவதற்காக நானே  விமானம்  அனுப்பி வைக்கிறேன் .இங்கு வந்து களத்தைப் பார்த்துவிட்டு பின்னர் அதுகுறித்து பேசவேண்டும்  என்று தெரிவித்தார்.

இதற்கு ராகுல் காந்தி தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.அதில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் நான் அடங்கிய குழுவினர்,ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக்கை பார்க்க வருகிறேன்.ஆனால்  எங்களுக்கு விமானம் தேவையில்லை. ஆனால், சுதந்திரமாக பயணித்து, மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

காஷ்மீர் ஆளுநர் இதற்கு பதில் அளித்தார்.அவரது பதிலில் ,ராகுல் காந்தி  காஷ்மீர்  வருவதற்கு நிபந்தனை விதிப்பதால், அழைப்பை வாபஸ் பெறுகிறேன் என்று தெரிவித்தார்.இதனிடையே இந்த கருத்துக்கு  ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கூறுகையில், எந்த நிபந்தனையும் இன்றி ஜம்மு காஷ்மீர் வர தயாராக இருக்கிறேன் , எப்போது வரட்டும்? என்று  கேள்வி  எழுப்பியுள்ளார்.

Recent Posts

மன்மோகன் சிங் உடலுக்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி… பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி வரை.!

மன்மோகன் சிங் உடலுக்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி… பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி வரை.!

 டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…

25 minutes ago

மாருதி 800 கார், அடுக்குமாடி குடியிருப்பு.. மறைந்த மன்மோகன் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…

50 minutes ago

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…

2 hours ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

2 hours ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

3 hours ago