சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கையசைத்த சசிகலா ! வேறு மருத்துவமனைக்கு மாற்றம்
சசிகலா விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிடி ஸ்கேன் எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில் நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.நேற்று மாலை ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் அதிகரித்தது.இதனையடுத்து பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ஆம்புலன்சில் ஏறும் முன்தொண்டர்களைப் பார்த்து கையை காட்டினார் சசிகலா.மேலும் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிடி ஸ்கேன் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது