#BigBreakingNews: சசிகலா 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் – மருத்துவமனை இயக்குனர் தகவல்
கண்கணிப்புக்காக மட்டுமே ஐசியூ -வில் வைக்கப்பட்டுள்ளார் என்று பௌரிங் மருத்துவமனை இயக்குனர் மனோஜ் தெரிவித்துள்ளார்.
வரும் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில் நேற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.நேற்று மாலை ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் அதிகரித்தது.இதனையடுத்து பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பௌரிங் மருத்துவமனை இயக்குனர் மனோஜ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,கண்கணிப்புக்காக மட்டுமே ஐசியூ -வில் வைக்கப்பட்டுள்ளார்.சசிகலா ஐசியூ நோயாளி அல்ல.சசிகலா உடல்நிலை சீராக உள்ளது.இருமல் காய்ச்சல் குறைந்துவிட்டது.உணவு சாப்பிட்டார்.எழுந்து நடந்தார்.3 நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துமனையில் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.