சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் : மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மரியாதை!
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
1875 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி குஜராத்தில் பிறந்தவர் தான் சர்தார் வல்லபாய் படேல். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் இவர் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருந்த விஷயங்களை எதிர்த்துப் போராடியவர். இவரது பிறந்தநாள் ஆண்டு தோறும் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் நினைவாக குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதை நதிக்கரையில் 597 அடி உயரம் உள்ள பிரமாண்டமான வல்லபாய் படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சர்தார் அவர்களின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.