#பரபரப்பு : கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் வெட்டி கொலை..!
கேரளா மாநிலம், பத்தனம்திட்டா அருகே திருவாளா பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப்குமார் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலம், பத்தனம்திட்டா அருகே திருவாளா பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப்குமார் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சி ஆர்.எஸ்.எஸ்.-ஐ சேர்ந்தவர்கள் தான் சந்தீப் கொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
அவர்களது குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த கேரள பாஜக, சந்தீப்குமார் கொலைக்கும், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப்குமார் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.