1962ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட போருக்கு பிறகு இந்தியாவின் 45 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பானது சீனாவின் வசமானது. – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றசாட்டு.
இந்திய-சீன எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் பகுதியில் ஜூன் 15 ஆம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் இருபது பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இந்திய-சீன எல்லை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கஆரம்பித்தது. இந்திய நாட்டின் எந்த ஒரு பகுதியையும் சீன ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், அண்மையில் வெளியான வரைபடத்தில் இந்தியாவின் சில பகுதிகள் சீனாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
தற்போது இந்த இந்தியா சீனா எல்லை விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‘ எல்லை பிரச்சினையை அரசியலாக்க கூடாது, எனவும் இந்தியாவின் 45 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள் நிலப்பரப்பை சீனா கைப்பற்றியுள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும், ‘ எல்லையில் நடைபெற்ற சம்பவமானது பாதுகாப்பு அமைச்சரின் தோல்வி என முத்திரை குத்த முடியாது. என கூறினார். ஏனெனில், ரோந்து பணியின்போது இச்சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். ரோந்து செல்லும் போது இருநாட்டு வீரர்களுக்கும் எச்சரிக்கையாக இருந்திருப்பார்கள். அப்படி இல்லாமல் இருந்திருந்தால் சீன படைகள் இந்திய எல்லைக்குள் வந்திருந்தால் இந்திய வீரர்கள் கவனித்திருக்க மாட்டார்கள். எனவே இந்த நேரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சரியானது அல்ல. என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டியதற்கு பதிலளிக்கும் வகையில், ‘ 1962ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட போருக்கு பிறகு இந்தியாவின் 45 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பானது சீனாவின் வசமானது. அதனை மறக்க முடியாது என தெரிவித்தார். மேலும், தற்போது அந்த நிலம் சீனாவின் வசம் உள்ளது. ஆனால், தற்போது மீண்டும் இந்தியாவின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளதா என்பது பற்றி எனக்கு தெரியாது. இது தேசிய பாதுகாப்பு குறித்த விஷயம் ஆகும். அதனை அரசியலாக்க கூடாது என தனது கருத்தை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…