பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாணவர்களுக்கு “சமஸ்கிருத ஸ்லோகங்கள்”-ஆளுநர் பகத் சிங்.!
- நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஜம்னாலால் ஒரு கட்டிடத்தின் திறப்பு விழாவில் ஆளுநர் பகத் சிங் கலந்து கொண்டார்.
- அப்போது பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாணவர்களுக்கு “சமஸ்கிருத ஸ்லோகங்கள்” கற்றுத்தர வேண்டும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஒரு கட்டிடத்தின் திறப்பு விழாவில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சென்றார்.அப்போது பேசிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை பற்றி பேசினார்.
அதில் , முன்பு வீடுகளில் எல்லாம் கன்னி பூஜை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது துஷ்டர்கள் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கிறார்கள் எனக் கூறினார்.மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாணவர்களுக்கு “சமஸ்கிருத ஸ்லோகங்கள்” கற்றுத்தரப்பட வேண்டும் என கூறினார்.