பாஜகவின் நாடகம் பாராட்டத்தக்கது ! சீனாவிடம் இருந்து ரூ.5700 கோடி கடன் பெற்றதாக ஆம் ஆத்மி எம்.பி குற்றச்சாட்டு

சீனாவிடம் இருந்து மத்திய அரசு ரூ.5700 கோடி கடன் பெற்றதாக ஆம் ஆத்மி எம்.பி குற்றச்சாட்டியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்திய சீன எல்லை பகுதிகளில் ஒன்றான கள்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றத்தை உருவாக்கியது.
இந்த மோதலுக்கு பின்னர், நாடு முழுவதும் சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளது. இதனால், பல இடங்களிலும் சீனப்பொருட்களை நடுவீதியில் போட்டு உடைத்தும், எரித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சின் எம்.பி சஞ்சய் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,பாஜக நாடகம் பாராட்டத்தக்கது ஆகும்.ஏனெற்றால் மத்திய அரசு சீனாவிடமிருந்து ரூ .5,700 கோடி கடனாக பெற்றுள்ளது.ஆனால் அதே நேரத்தில் சீனாவை புறக்கணிக்குமாறு மக்களிடம் கூறிவருகிறார்.எல்லையில் வீரர்கள் நாட்டிற்காக தங்களது உயிர்களை இழந்து உள்ளனர்.ஆனால் பாஜக அடிபணித்த கொள்கையிலே செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
वाह रे भाजपाईयों तुम और तुम्हारी ड्रामेबाज़ी क़ाबिले तारीफ़ है देश को कहते हो चीन का बहिष्कार करो और मोदी सरकार चीन से 5700 करोड़ का क़र्ज़ लेती है सीमा पर जवान शहीद हो रहे हैं और भाजपा सरकार घुटना टेक योजना के तहत काम कर रही है। https://t.co/uLPn1VzeCo
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) June 28, 2020