குஜராத் கலவர வழக்கு… சிறையில் இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மீண்டும் கைது..
2002 குஜராத் கலவரத்தின் போது அதிகாரத்தை தவறாக உபயோகப்படுத்தியதாக சிறையில் இருக்கும் சஞ்சய் பட் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது.
அப்போது, அந்த கலவர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சமயம் சில முக்கிய பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகளே சிக்கியிருந்தனர்.
அதில், அந்த சமயம் மாநில புலனாய்வு பணியகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு பொறுப்பாளராக இருந்தவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட். இவர் அந்த சமயம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மக்களை தவறான பாதைக்கு திசை திருப்பும் வண்ணம் கருத்து தெரிவித்த காரணமாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
2015ஆம் ஆண்டு அவருக்கு எந்த அரசு பணியையும் கொடுக்காமல் நீக்கப்பட்டார். அதன் பின்னர் தற்போது, பனாகஸ்ந்தா சிறையில் இருக்கும் இவரை ஜூலை 12ஆம் தேதி சிறையில் வைத்தே சிறப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். தற்போது ஜூலை 20ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உள்ளனர்.