இந்தோ-திபெத்திய எல்லை காவல்;புதிய டிஜியாக சஞ்சய் அரோரா பொறுப்பேற்பு..!
இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ITBP) இன் புதிய டிஜியாக சஞ்சய் அரோரா பொறுப்பேற்றுள்ளார்.
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவர் எஸ்.எஸ்.தேஸ்வால் இன்று ஆகஸ்ட் 31-ல் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு,இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவராக ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா கடந்த ஆக.25 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.அதேபோல எல்லை பாதுகாப்புப்படை தலைவராக ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில்,இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ITBP) இன் புதிய DG யாக சஞ்சய் அரோரா பொறுப்பேற்றுள்ளார்.1988ம் ஆண்டு, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த சஞ்சய் அரோரா ஐபிஎஸ், சிஆர்பிஎப் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி வந்த நிலையில்,தற்போது இந்தோ-திபெத்திய எல்லை காவல் புதிய DG யாக பொறுப்பேற்றுள்ளார்.
Delhi: Sanjay Arora (on left in pics) takes charge as new DG of Indo-Tibetan Border Police (ITBP).
Outgoing ITBP DG SS Deswal was also present pic.twitter.com/gQC1KnImXK
— ANI (@ANI) August 31, 2021