சனாதன பேச்சு…! அமைச்சர் உதயநிதி மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
Udhayanidhi stalin: நீங்கள் ஒரு சாதாரண நபர் கிடையாது, ஒரு அமைச்சர் என்று உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சனாதன வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், ஒரு விழாவில் பேசும்போது சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார், அவரின் பேச்சு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் விவாதத்தை கிளப்பியது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா அமைச்சர்கள், தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
Read More – தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு..! உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு
மேலும் இந்து அமைப்பை சேர்ந்த பல்வேறு தரப்பினர் உதயநிதிக்கு எதிராக பல மாநிலங்களில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபகள், “நீங்கள் அரசியலமைப்பின் 19(1)(ஏ)- பிரிவின் கீழ் உங்களது கருத்து உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள். அரசியலமைப்பு 25-வது சட்டப்பிரிவின் கீழ் வழங்கும் உரிமையை துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள்.
Read More – புதிய மாவட்டங்களை அமைப்பது பெரிதல்ல… கட்டட திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!
தற்போது உங்களுக்கு உள்ள உரிமையின்படி மேல்முறையீட்டிற்கு வந்துள்ளீர்கள். நீங்கள் பேசியதின் விளைவுகள் உங்களுக்கு தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாதாரண நபர் கிடையாது, ஒரு அமைச்சர். பின் விளைவுகளை அறிந்து பேசியிருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் அமைப்பு சட்டத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகமாக பேசியுள்ளீர்கள். இது ஏற்புடையது அல்ல” என தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 15-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.