சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம்-யோகி ஆதித்யநாத்.!

Default Image

சனாதன தர்மம், இந்தியாவின் தேசிய மதம் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என்றும், ஒவ்வொரு குடிமகனும் அதை மதிக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். சுயநல எண்ணங்களுக்கு மேலாக உயர்ந்து நாம் ராஷ்ட்ரிய தர்மத்துடன் இணைக்கப்படுகிறோம். இந்து மத இடங்களை மீட்டெடுக்க, மக்களை பிரச்சாரம் செய்யுமாறு முதல்வர் யோகி வலியுறுத்தி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் தங்கள் பாரம்பரியத்தை மதிக்கவும், அதைப் பாதுகாக்கவும் உறுதிமொழி எடுக்க வைத்ததாக முதல்வர் யோகி கூறினார். 1400 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீலகண்டப் பெருமானின் ஆலயத்தைப் புனரமைத்திருப்பது, பாரம்பரியத்திற்கு நாம் அளித்திருக்கும் மரியாதைக்கான எடுத்துக்காட்டு என்று அவர் மேலும் கூறினார்.

ராஜஸ்தான் மாநிலம் பின்மாலில் அமைந்துள்ள நீலகண்ட மகாதேவ் கோயிலில் சிலைகள் மறுசீரமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், கூறும்போது சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம்’ என்று ஒவ்வொரு குடிமகனும் மதிக்க வேண்டும் என கூறினார். அயோத்தியில் ராமர் கோயில் போன்ற மத இடங்களை மீட்டெடுக்க பிரச்சாரம் செய்வதற்கு மக்களை யோகி வலியுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்