மோடி பிரதமராக பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவு பெரும் தினத்தை ‘கருப்பு தினமாக’ அனுசரிக்க டெல்லியில் போராடும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.இதற்காக,டெல்லி எல்லையில் தங்கி 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து,வருகின்ற மே 26 ஆம் தேதியுடன் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கி 6 மாதம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில்,இதுறித்து ‘சம்யுக்தா கிஷான் மோர்சா’ என்ற விவசாய சங்கத் தலைவர் பல்பீர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது,”மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.மேலும்,நாங்கள் போராட்டத்தை தொடங்கி 6 மாதம் நிறைவடையவுள்ளது.
அதுமட்டுமல்லாமல்,பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று வருகின்ற 26 ஆம் தேதியுடன் 7ஆண்டுகள் நிறைவடையவுள்ளது.எனவே,அன்றைய தினத்தை ‘கருப்பு தினமாக’ அனுசரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதைப்போல,நாட்டு மக்கள் அனைவரும்,தங்கள் வீடுகள் மற்றும் வானங்களில் மே 26 ஆம் தேதியன்று கருப்பு கொடியை ஏந்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்”, என்று கூறினார்.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…