“விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ்,மணிமண்டபம்”-6 முக்கிய கோரிக்கைகளுடன் பிரதமர் மோடிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம்!

Published by
Edison

சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி,டெல்லியில் விவசாயிகள் ஓராண்டாக போராடி வரும் நிலையில் ,மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும்,அதன்படி வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று கடந்த 19 ஆம் தேதியன்று பிரதமர் மோடி அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பு,மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒப்புதல் அவசியம் என்பது கட்டாயம் என்ற நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் வருகின்ற 24 ஆம் தேதி புதன்கிழமையன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில்,3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில்,வேளாண் சட்டம் ரத்து தொடர்பாக சட்டம் இயற்றும் வரை  டெல்லி எல்லையில் போராட்டம்  தொடரும் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.அக்கடிதத்தில்,சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு கீழ்க்கண்ட தங்களது 6 கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

  1. அனைத்து விவசாயிகளுக்கும் விளைபயிர்களுக்கு சாகுபடி செலவுக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதை உறுதிசெய்ய சட்டம் இயற்ற வேண்டும்.
  2. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்,
  3. போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்.
  4. மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்,
  5. டெல்லி மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் காற்றுத்தர மேலாண்மைக்கான சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களை நீக்க வேண்டும்.
  6. குறிப்பாக,லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்கவேண்டும்”,என வலியுறுத்தியுள்ளது.

Recent Posts

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

3 hours ago

உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…

3 hours ago

INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…

7 hours ago

சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…

8 hours ago

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…

9 hours ago