மாதிரி வாடகை சட்டத்துக்கு ஒப்புதல்…! இனிமேல் வீட்டின் உரிமையாளருக்கு 2 மாத அட்வான்ஸ் கொடுத்தால் போதும்…!

Default Image

நேற்று மத்திய அமைச்சரவை குழு மாதிரி வாடகை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வாடகை சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மாதிரி வாடகை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வாடகை மற்றும் குத்தகை முறையில் புதிய சட்டங்களை கொண்டு வரவும், பொருத்தமான முறையில் திருத்தங்கள் கொண்டு வரவும் மாதிரி வாடகை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

வீட்டு வாடகை உயர்வு, வாடகை முன்பணம், வாடகை ஒப்பந்தம் புதுப்பிப்பது, வீட்டை காலி செய்வதில் ஏற்படும் தகராறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 முக்கிய அம்சங்கள் :

  • புதிய மாதிரி வாடகை ஒப்பந்த சட்டம் , மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து கொண்டுவரப்பட்டது.
  • வாடகைதாரர்களிடம் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் வாங்க முடியாது.
  • மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் , வாடகை ஒப்பந்த நகலை, பதிவேற்றம் செய்யலாம்.
  • முதலில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒப்பந்த வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது இந்த ஒப்பந்தத்தை பதிவு செய்யா விட்டாலும் இருதரப்பும் நீதிமன்றம் செல்ல முடியும்.
  • புதிய சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாடகை ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.
  • வீட்டை காலி செய்ய விட்டால் சட்டப்படி வாடகையை அதிகரிக்க உரிமை உண்டு.
  • ஆன்லைன் அல்லது நேரடியாக வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும் இந்த ஒப்பந்தத்தைப் பதிவு செய்யாவிட்டால் நிவாரணம் கோரி இருதரப்பும் நீதிமன்றம் செல்ல இயலாது
  • புதிய சட்டத்தின் அடிப்படையில், ஒப்பந்தம் போடாத நிலையில் வீட்டு உரிமையாளர் மட்டும் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்.
  • வாடகை தொடர்பான புகார்களை விசாரிக்க தனி வாடகை ஆணையம் அமைக்க புதிய சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
  • காலியாக இருக்கும் வீடுகளை எல்லாம் வாடகைக்கு விட இந்த மாதிரி வாடகை சட்டம் உதவும்.
  • வாடகை வீடுகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இந்த சட்டம் ஊக்குவிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்