கையில் முத்தமிட்டு கொரோனாவை விரட்டுவதாக கூறிய சாமியார் உயிரிழப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த வைரஸ் குறித்த வதந்தியான செய்திகளும் பரவி வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா என்ற சாமியார் பல ஆண்டுகளாக ஆசிரமம் அமைத்து அருள்வாக்கு கூறி, தன்னுடைய மாய வலையில் சிக்க வைத்து வந்துள்ளார். இதனையடுத்து, கொரோனா பரவால்லை தடுக்க, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வந்த நிலையில், அஸ்லம் பாபா என்ற சாமியார், முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவதாக கூறி வந்துள்ளார்.
இவரது இந்த பேச்சை நம்பி, கொரோனா அச்சத்தில் இருந்த பலர் அஸ்லம் பாபாவை தேடி வந்து முத்தம் பெற்றுச் சென்றுள்ளனர். அவ்வாறு வந்து சென்றவர்களில், யாரோ ஒருவர் அவருக்கு கொரோன வைரஸை பரப்பி விட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட அஸ்லம் பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநில சுகாதார துறையினர், அஸ்லம் பாபாவிடம் முத்தம் பெற்றுச் சென்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் 19 பேர் கண்டறியப்பட்ட நிலையில் பாபாவின் தொடர்பால் 24 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை தனிமைப்படுத்தும் முகாமில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் ராட்லா மாவட்டத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது, அஸ்லம் பாபாவிடம் முத்தம் வாங்கி சென்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…