சமீத் தக்கரை அக்டோபர் 30 வரை போலீஸ் வைக்க உத்தரவு..!

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் அக்டோபர் 24 அன்று குஜராத்தின் ராஜ்கோட்டிலிருந்து சமீத் தக்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சமீத் தக்கரை இன்று நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அக்டோபர் 30 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2 ம் தேதி, மும்பையின் வி.பி. மார்க் காவல் நிலையம் மற்றும் நாக்பூரில் சமிதிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.