ஓரினசேர்கை திருமண வழக்கு.! நீதிமன்ற தீர்ப்பை சமூகம் ஏற்றுக்கொள்ளாது.! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.!
ஓரின சேர்க்கை திருமணம் குறித்த வழக்கில், தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் ஒரு குறிப்பிடத்தக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சட்ட அங்கீகாரம்:
ஓரின சேர்க்கை திருமணங்கள் சட்ட அங்கீகாரம் கோருவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ள. இந்த வழக்கு விசாரணை தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
பாரபட்சம்:
இந்த விசாரணையில் ஆண் – பெண் இடையிலான திருமணங்கள் மட்டுமே அங்கீகரிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் இருப்பதாகவும், இதனால், ஓரின சேர்க்கையாளர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், இது அவர்களின் கண்ணியம் மற்றும் தனியுரிமையின் அடிப்படை உரிமையை மீறுவதாகவும் உச்சநீதிமன்றத்தில் மேற்கண்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
மத்திய அரசு விளக்கம்:
ஏற்கனவே மத்திய அரசு சார்பில் ஒரு விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மத்திய அரசு உச்சநீதிமன்றத்திற்கு ஓர் கோரிக்கையை முன் வைத்துள்ளது. திருமணம் என்பது, ஆண் மற்றும் பெண் சம்பந்தப்பட்ட நிகழ்வு அல்ல. அது ஒரு பன்முகத்தன்மை கொண்ட நிகழ்வு.
திருமணத்தை அங்கீகரிப்பது ஒரு சட்டமன்ற செயல்பாடு, இந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் முடிவெடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு தனது விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரிய மனுக்களை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை:
இந்த நிலையில், உயிரியல் ரீதியாக ஆண், பெண் என்ற முழுமையான கருத்து எதுவும் இல்லை, மேலும் உங்கள் பிறப்புறுப்புகள் என்ன என்பது பற்றிய கேள்வி மட்டுமல்ல இந்த விவகாரம் என தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், தெரிவித்தார்.
தலைமை நீதிபதி கருத்து:
இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, சட்டத்தையோ அதன் தீர்ப்பையோ பொறுத்து எந்தவொரு உறவையும் இந்த சமூகம் ஏற்றுக்கொள்வது இல்லை, நமது பாராளுமன்றத்தின் சட்ட நோக்கம் என்பது உயிரியல் ரீதியான ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான உறவாகவே இருந்து வருகிறது.
முன்னதாக மேத்தா தனது வாதத்தின்போது, திருமணத்தின் மூலம் புதிய சமூக-சட்ட உரிமைகளை உருவாக்க நீதித்துறை சரியான மன்றமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.