தன்பாலின ஜோடிகள் திருமணத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமை ஆணையம் மனு.
தன்பாலின ஜோடிகள் திருமணத்தை அங்கீகரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய பெண்கள்&குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. தன் பாலின ஜோடிகள் குழந்தைகள் தத்தெடுப்பதையும் அனுமதிக்க கூடாது என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பாலின குறித்த புரிதலும் முக்கியத்துவமும் இல்லாமல் குழந்தை வளப்பதற்கு வாய்ப்பு உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, தன்பாலின திருமணத்திற்கு பல நாடுகள் சட்ட அங்கீகாரம் அளித்துள்ள நிலையில், தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி தன்பாலீர்ப்பு கொண்ட நான்கு ஆண் தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதுமட்டுமில்லாமல், நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வை உருவாக்கி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை வரும் நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில், தன்பாலின ஜோடிகள் திருமணத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமை ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…