சபரிமலையில் மகரஜோதியாக ஜயப்பன்…!! குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்..!!!
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையோடு மகர விளக்கு பூஜையும் மிக பிரசித்திப் பெற்ற ஒன்றாகும்.
இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஜயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டது.திறக்கப்பட்ட அன்று முதல் சுவாமி ஐய்யப்பனுக்கு பல்வேறு விசேஷ பூஜைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜையானது நாளை மாலை 6.35 மணிக்கு தொடங்குகிறது.இந்த நிகழ்வில் மகரவிளக்கு பூஜையின்போது சபரிமலையில் அமைந்துள்ள பொன்னம்பல மேட்டில் ஜோதியாக ஐயப்பன் தரிசன நிகழ்வு நடைபெறும்.மகரஜோதி தரிசனத்தை கண்டு ஐயப்பனின் அருளை பெற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்வது தொடர்பான விவகாரத்தில் பல்வேறு போராட்டங்கள் அங்கு நடந்து வருவதால் சபரிமலை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு சபரிமலையை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.