12,700 ஆசிரியர்களின் சம்பளம் 3 மடங்கு உயர்வு..! பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு..!

CMBhagwantMann

பஞ்சாபில் 12,700 ஆசிரியர்களின் சம்பளம் மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பணிநிரந்தரம் செய்யப்பட்ட 12,700 ஆசிரியர்களின் சம்பளம் மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர் கல்வித் தகுதிகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 58 ஆண்டுகள் பணியை நிறைவு செய்யும் வரை அவர்களது ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சம்பளத்தில் 5 சதவீதம் உயர்வு வழங்கப்படும் என்று பகவந்த் மான் கூறியுள்ளார்.

அதன்படி, இதுவரை மாதம் ரூ.9,500 சம்பளமாக பெற்று வந்த இணை ஆசிரியர்களுக்கு இனி ரூ.20,500 ஆகும் தொடக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் நர்சரி ஆசிரியர் பயிற்சியில் தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் ரூ.10,250 லிருந்து ரூ.22,000 ஆக வழங்கப்படும் என கூறியுள்ளார்.

அதேபோல், தற்போது ரூ.11,000 சம்பளம் பெறும் பி.ஏ., எம்.ஏ., மற்றும் பி.எட் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.23,500 மதிப்பிலான ஊதியம் வழங்கப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்