தென்னாப்பிரிக்கா, கிரீஸ் பயணங்களை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, சந்திராயன்-3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை, பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டினார்.
பின் பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் திட்ட இயக்குனர் வீர முத்துவேல் சந்திராயன்-3 எடுத்த புகைபபடங்களை பரிசாக வழங்கினர். அதன்பின், இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையின் கூட்ட அரங்கில் பேசிய அவர், இந்தியா வந்தவுடனே உங்களை சீக்கிரம் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். உங்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்த விரும்பினேன்.” எனக் கூறினார்.
தொடர்ந்து, “உங்களின் கடின உழைப்புக்கு சலாம். உங்கள் விடாமுயற்சிக்கு சலாம்” என்று கூறிய பிரதமர், திடீரென கண்களில் கண்ணீர் சிந்தினார். இதனால் அங்கிருந்த விஞ்ஞானிகளும் சோகமாகினர். பிறகு கண்ணீரை அடக்கிக்கொண்டு, நீங்கள் நாட்டைக் கொண்டு சென்ற உயரம் அசாதாரணமானது அல்ல. யாரும் எட்டாத இடத்தை நாங்கள் அடைந்துவிட்டோம். இதுவரை யாரும் செய்யாததை நாங்கள் செய்துள்ளோம். இன்றைய இந்தியா, அச்சமற்ற மற்றும் போராடும் இந்தியா” என்று பிரதமர் கூறினார்.
மேலும், “21ஆம் நூற்றாண்டின் உலகின் மிகப்பெரிய பிரச்சினைகளை நாங்கள் தீர்ப்போம். அந்த நாள் ஆகஸ்ட் 23ம் தேதி. நிலவில் லேண்டர் தரைஇறங்கியவுடன். நாடு முழுவதும் இஸ்ரோ மையத்தில் இருந்து ஆரவாரம் செய்ததை யாரால் மறக்க முடியாது. சில நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும். அந்த தருணம் மறக்க முடியாதது. அந்தத் தருணம் இந்த நூற்றாண்டுக்கான உத்வேகமாக அமைந்தது.” எனவும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, நிலவில் சந்திராயன் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவ சக்தி’ என பெயரிட்டு அழைக்கப்பட உள்ளது. நிலவில் லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆக.23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும். விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு தலை வணங்குகிறேன். சந்திராயன்-2 நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு ‘திரங்கா’ (மூவர்ணக்கொடி) என பெயரிடப்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…