மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு!
2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாதுகாப்புத்துறைக்கு 4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறையில் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயும், ஆயுதக் கொள்முதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு 93 ஆயிரத்து 982 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
பாதுகாப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பலன்களுக்கான தொகை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 853 கோடி ரூபாய் என ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக பாதுகாப்புத்துறையில் மட்டும், 4 லட்சத்து 4 ஆயிரத்து 364 கோடியே 71 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.