காசிரங்கா பூங்காவிற்கு இரவு நேரத்தில் பயணம் செய்த விவகாரத்தில் எந்த விதி மீறலும் இல்லை என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா விளக்கமளித்துள்ளார்.
அசாமில் பிரம்மபுத்திரா நதிக்கரையோரம், காசிரங்கா வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா அண்மையில் திறந்து வைத்தார். அப்போது, இரவு, சத்குரு ஜக்கி வாசுதேவ் , முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா ஆகியோர் ஒரே காரில் இரவு பூங்காவிற்குள் வலம் வந்தனர். அந்த காரை சத்குரு ஓட்டினார்.
இந்த சம்பவம் அசாம் சமூக ஆர்வலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் படி , இரவு பொதுமக்கள் யாரும் வனவிலங்கு பூங்காவிற்குள் செல்ல கூடாது. அது வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். என சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சோனேஸ்வர் நரா மற்றும் பிரபின் பேகு ஆகியோர் கோலகட் மாவட்ட போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சர்ச்சை தொடர்பாக, பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, ‘ இரவு நேரங்களில் பூங்காவிற்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என்று சட்டம் இல்லை. இந்த விஷயத்தில் விதிமீறல் ஏதும் நடைபெறவில்லை என்று முதல்வர் கூறினார்.
‘ வனவிலங்கு சட்டத்தின்படி, இரவு நேரத்திலும் வார்டன் அனுமதி உடன் செல்லலாம். இரவில் மக்கள் பூங்காவிற்கு செல்ல தடை என எந்த சட்டமும் இல்லை. நாங்கள் பூங்காவை முறையாக திறந்து வைத்துள்ளோம். தற்போது சத்குருவும், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் வந்துள்ளனர். அவர்களின் வருகையால், இந்த முறை காசிரங்காவிற்கு சுற்றுலா சீசன் சிறப்பாக அமையும்.’ என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா கூறியுள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…