கேரளா விமான விபத்துக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் வருத்தத்தை பதிவிட்டார். மேலும், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்யவும் டிவிட்டர் மூலம் சச்சின் அழைப்பு விடுத்தார்.
துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது. ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்கள் வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில்விபத்துக்குள்ளான விமானத்தில் உள்ள அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன். இந்த துயர விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ‘ குண்டோட்டி மெர்சி நிவாரண மருத்துவமனை (Kundotti Mercy Relief Hospital) மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (Kozhikode Medical College Hospital) அனைத்து இரத்தக் குழு நன்கொடையாளர்களும் முன் வந்து ரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட டிவிட்டை ரீ-டிவீட் செய்து பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ கோழிக்கோடு விமான விபத்து உண்மையில் சோகமான செய்தி. ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்’ என தனது வருத்தங்களை பதிவிட்டுள்ளார்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…