ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனால், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் உட்பட சச்சின் பைலட் டெல்லியில் முகாம் மிட்டார்.
இதன் காரணமாக ராஜஸ்தான் அரசியல் மத்தியிலும் குழப்பம் ஏற்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை கூட உள்ளது. அப்போது, அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இந்த பரபரப்பான சூழலில் நேற்று திடீர்ரென சச்சின் பைலட் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர், சச்சின் பைலட் சமரசத்துக்கு வந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேசி வேணுகோபால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சச்சின் பைலட் இன்று சந்திதார். அப்போது, கட்சி தொடர்பான தனது குறைகளை ராகுல்காந்தியிடம் கூறினார். இருவரும் வெளிப்படையான ஆலோசனை நடத்தினர் என கூறினார்.
சச்சின் பைலட் சமரசத்துக்கு வந்துள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அசோக் கெலாட் பெரும்பான்மை நிரூபிப்பதில் எந்த பிரச்சனை இருக்காது என கூறப்பட்டுகிறது. ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த அரசியல் குழப்பம் தற்போது முற்றுப்புள்ளி வைக்கபட்டுள்ளது என கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இன்று மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூர் செல்ல உள்ளார் என கூறப்படுகிறது. தனது ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ள சச்சின் பைலட் “நல்லிணக்கத்தை வழிநடத்திய காந்திகளுக்கு நன்றி, எங்கள் குறைகளை கவனித்து உரையாற்றியதற்காக திருமதி சோனியா ஜி, ராகுல் காந்தி ஜி, பிரியங்கா காந்தி ஜி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
எனது நம்பிக்கையில் நான் உறுதியாக நிற்கிறேன், மேலும் ஒரு சிறந்த இந்தியாவுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அசோக் கெலாட்டிற்கும், சச்சின் பைலட்டிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சச்சின் பைலட் தற்போது தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லியில் உள்ளனர் என்பது குறிப்பித்ததக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…