அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில்.. சற்று நேரத்தில் சச்சின் பைலட் செய்தியாளர் சந்திப்பு.!

Default Image

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், நேற்று சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், அம்மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு சச்சின் பைலட் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றவுள்ளார். தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ்க்கு எதிராக போர்க்கொடியை தூக்க  தொடங்கிய பின்னர் பைலட் நேற்று தனது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.

முன்னதாக, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் அசோக் கெஹ்லோட் அழைத்த  இரண்டு கட்சி கூட்டத்தைத் தவிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்