ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்து உள்ளது. சமீபத்தில், அம்மாநிலத்தில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் இடையே மோதல் காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற 2 காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டங்களிலும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை, இதனால், சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். இந்த தகுதி நீக்க நோட்டீஸ்க்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. தற்போது உள்ள நிலைமையை தொடரவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இன்று ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியதாக இரண்டு மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டுக்கு எதிராக போர் கோடி தூக்கி சென்ற சச்சின் பைலட் மற்றும் 18 அதிருப்தி ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெய்ப்பூரிலிருந்து வெளியேறிய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த சந்திப்பு நடைபெறுகின்றது.
இந்த சந்திப்பில் ராகுல் காந்தியுடனும், மூத்த தலைவர்கள் அகமது படேல் மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோருடன் சச்சின் பைலட் பேசியதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை, அவர்கள் சந்தித்ததிலிருந்து, ஒரு நல்ல முடிவு எதிர்பார்க்கப்படுகிறது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டம் குறித்து சச்சின் பைலட்டோ, ராகுல் காந்தியின் அலுவலகமோ கருத்து தெரிவிக்கவில்லை. ஜெய்ப்பூரிலிருந்து வெளியேறிய பின்னர் காந்தி பைலட், ராகுல் காந்தியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும். வருகின்ற 14-ம் தேதி ராஜஸ்தான் சட்டமன்றம் கூடவுள்ளது அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறலாம் என கூறப்படுகிறது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…