சபரிமலை போராட்டம் நடத்துபவர்களை சுய விளம்பரத்துக்காகக் கைது நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட கூடாது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆனால் சபரிமலையில் குறிப்பிட்ட வயதினர் வருவதற்கு அனுமதியில்லை என்ற வழக்கம் உள்ளது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு கேரள மக்கள் மத்தியுலும் ஐயப்ப பக்த்ர்களிடமும், பெண்களும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐயப்பனை தரிசிக்க போவதாக 3 பெண்கள் சபரிமலை சென்றனர் ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் சன்னிதானத்தை நெருங்கிய நிலையிலும் அனுமதிக்கபாடமல் திருப்பி அனுப்பட்டனர்.இதனிடையே சபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் கலவரங்களும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்த போராட்டங்களில் ஈடுபட்டதாக இரண்டே நாட்களில் 452 வழக்குகளை பதிவு செய்துள்ளது கேரள போலீசார்.
மேலும் வழக்கு போட்டது மட்டுமல்லாமல் 2 ஆயிரத்து 300 பேரை கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக கேரள நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது அந்த வழக்கினை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் சபரிமலையில் போராட்டம் நடத்தினார்கள் என்ற பெயரில் சுய விளம்பரத்துக்காகக் கைது நடவடிக்கையில் அரசும், போலீஸாரும் இறங்கக்கூடாது என்று கூறினர்.மேலும் அப்பாவிகளை கைது செய்வது தொடர்ந்தால் கேரள அரசு மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
DINASUVADU
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…