சபரிமலையில் ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பெண் பக்தர்களின் வயது சான்றிதழை சரிபார்த்தபின் கோவிலுக்கு செல்ல அனுமதி கொடுக்கின்றனர்.
அதிலும் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் நீதிமன்றத்தின் அனுமதி கொடுத்த பிறகே கேரளா போலீசார் சபரிமலைக்கு செல்ல அனுமதி கொடுக்கின்றனர்.அனுமதி இல்லாமல் வரும் பெண்களை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர்.
இந்நிலையில் இன்று தமிழகத்தை சார்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் இருமுடி கட்டிக்கொண்டு வந்து உள்ளார். பம்பை சோதனையில் இருந்த போலீசார் அந்த சிறுமியை பார்த்ததும் அடையாள அட்டையை பரிசோதனை செய்தனர்.
அதில் அந்த சிறுமிக்கு 12 வயது நிரம்பியது தெரியவந்தது.இதை தொடர்ந்து போலீசார் சிறுமியை சபரிமலைக்கு அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர்.தந்தை எவ்வளவோ கெஞ்சியும் போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
மேலும் சிறுமி கீழே உள்ள முகாமில் தங்கியிருக்கலாம் மற்றவர்கள் சபரிமலை சென்று வரலாம் என போலீசார் கூறினர். இதற்கு முன் 16-ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த 10 பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை பம்பையில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதேபோல நேற்று காலை நிலக்கல்லில் 2 பெண்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சித்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதல் பொதுக்குழு…