சபரிமலை செல்ல 36 பெண்கள் அனுமதி விண்ணப்பம் : தேவசம்போர்டு உடன் கேரள அரசு ஆலோசனை!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என சென்றாண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் போடப்பட்டன,
அதனை 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்ததால், 7 பேர் கொண்ட பெரிய அமர்வு தீர்ப்பு வழங்கும் வரை இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்பே அமலில் இருக்கும் என கூறப்பட்டது.
இதனையடுத்து, 36 பெண்கள் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களை அனுமதிப்பது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு உடன், கேரளா அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.