உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்கு ஒரு நாளைக்கு 5000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டும் கட்டுப்பாடுகளுடன் வழிபாடு நடத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர பூஜை காலங்களில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள். ஆனால், கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு பல கட்டுப்பாடுகளுடன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி மண்டல மகர விளக்கு பூஜை காலங்களில் ஒரு நாளைக்கு 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் மேலும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உடன் வைத்திருக்க வேண்டும். நிலக்கல்லில் தரிசிக்க வரும் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படும். மிக முக்கியமாக பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…